இலங்கை அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்க!!

ஆசிரியர் - Editor II
இலங்கை அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்க!!

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்கவை பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக (Bowling Strategy Coach) நியமிக்கப்பட்டுள்ளார். 

இத்தனவலை  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதான இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு மூலோபாய  பயிற்சியாளராக அவர் செயற்படவுள்ளார். 

லசித் மலிங்க இலங்கையின் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிப்பதூடு, தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, மூலோபாய திட்டங்களை களத்தில் செயல்படுத்த உதவுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லசித் மலிங்கவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற டெத் பந்துவீச்சு நிபுணத்துவமும், இந்த முக்கியமான தொடருக்கு அணிக்கு பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் நம்புவதாக தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு