SuperTopAds

நீர் தாங்கிக்குள் 3 ஆயிரம் லீற்றர் டீசல்..! சோதனை நடவடிக்கையின்போது அதிர்ச்சியடைந்த பொலிஸார், பதுக்கல் வியாபாரி கைது..

ஆசிரியர் - Editor I
நீர் தாங்கிக்குள் 3 ஆயிரம் லீற்றர் டீசல்..! சோதனை நடவடிக்கையின்போது அதிர்ச்சியடைந்த பொலிஸார், பதுக்கல் வியாபாரி கைது..

சுமார் 3 ஆயிரம் லீற்றர் டீசலுடன் பதுக்கல் வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்திருப்பதுடன், அவரிடமிருந்த டீசலை பறிமுதல் செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் அம்பாறை பட்டியப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும் டீசலை பதுக்கிவைத்திருந்த பதுக்கல் வியாபாரியையும் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

இதேவேளை குறித்த நபர் சந்தேகம் ஏற்படாதவண்ணம் நீர் தாங்கியில் டீசலை பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.