எம்.எஸ்.தோனி மீது வழக்குப்பதிவு!! -வெளியான அதிர்ச்சித் தகவல்-
ஜ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடும் சி.எஸ்.கே அணியின் தலைவர் தோனி மீது பீஹாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஹாரில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற காசோலை பரிவர்த்தனை, வங்கியில் செல்லுபடியாகவில்லை என்றும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன விளம்பரத்தில் தோனி நடித்து இருப்பதால், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.