SuperTopAds

விபத்தில் துண்டான இளைஞரின் கையுடன் வைத்தியசாலையில் உலாவிய நாய்!!

ஆசிரியர் - Editor II
விபத்தில் துண்டான இளைஞரின் கையுடன் வைத்தியசாலையில் உலாவிய நாய்!!

வைத்தியசாலையில் இருந்த விபத்தில் துண்டான இளைஞர் ஒருவரின் கையை நாய் கவ்வி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்க்கார் என்ற இளைஞர் சம்பவத்தன்று ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்தகாயம் அடைந்த அவரது வலது கை துண்டானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிலிகுரி மருத்துவகல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் துண்டிக்கப்பட்ட கையையும் எடுத்து சென்றனர்.

அதை வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும். விரைவில் அறுவைச் சிகிச்சை மூலம் கையை பொருத்த இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வைத்தியசாலைக்குள் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று அந்த வைத்தியசாலையின் மொட்டை மாடியில் ஏதோ ஒன்றை வாயில் கவ்வி இருந்ததை பொதுமக்கள் பார்த்தனர்.

அப்போது அது துண்டிக்கப்பட்ட சஞ்சய்யின் கை என்பது தெரியவந்தது. இதை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த நாயிடம் இருந்து கையை பிடுங்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் நாய் கையை எலும்பைகடித்து திண்பது போல பாதியை சாப்பிட்டு விட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சய் உறவினர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கை எப்படி நாய் வாய்க்கு சென்றது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.