SuperTopAds

பிரித்தானியாவின் புதிய விசாத்திட்டம்!! -இலங்கையர்களுக்கு பெரும் ஏமாற்றம்-

ஆசிரியர் - Editor II
பிரித்தானியாவின் புதிய விசாத்திட்டம்!! -இலங்கையர்களுக்கு பெரும் ஏமாற்றம்-

வேலைவாய்ப்புக்களைக் பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு பிரித்தானியா புதிய நுழைவிசைவு திட்டத்தை நேற்று திங்கட்கிழமை முதுல் ஆரம்பித்துள்ளது. 

இவ் புதிய திட்டத்தில் பிரித்தானிய பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்கு திரும்பாமல் 2 வருடங்கள் வரை தங்கி பணிபுரிவது அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 5 வருடங்களில் பட்டம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் அவர்கள் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், புதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் பட்டியலில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை என்ற தகவல் இலங்கை மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையளித்துள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய விசாத்திட்டத்தால் இலங்கையர்களுக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது. 

குறித்த பட்டியலில் 20 அமெரிக்க பல்கலைக்கழகளும் கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஒஸ்ரேலியா, ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.