மக்களுக்கு வினைத்திறனான சேவை வழங்க அழுத்தம் கொடுக்கும் குழு உருவாக்கம்...
வடமாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கம் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக “முன்நோக்கி நகர்வோம்” என்ற தலைப்பில் அழுத்தம் கொடுக்கும் குழு ஒன்று இன்று யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் மற்றும் மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆ கியோர் ஒன்றிணைந்து இந்த அழுத்தம் கொடுக்கும் குழுவை ஆரம்பித்திருக்கின்றனர். இ ன்று காலை 10மணிக்கு நல்லூர் சுற்றாடலில் உள்ள தனியார் வீடொன்றில் இந்த
அழுத்தம் கொடுக்கும் குழு பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவி யலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் அங்குரார்ப்பணம் செ ய்யப்பட்டுள்ளது. இந்த அழுத்தம் கொடுக்கும் குழுவின் நோக்கங்களாவன,
வட மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அம் மக்களிற்கு வினைத்திறனான சேவை வழ ங்கல் தொடர்பில் வட மாகாண சபையும், மத்திய அரசாங்கத்தின் நிறுவனங்களும் மற்று ம் உள்@ராட்சி நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வடக்கு மாகாண சபை முக்கிய வகிபாகம் வகிக்கின்றது.
ஆயினும், வடக்கு மாகாண சபையின் கடந்த நான்கரை வருட செயற்பாடுகள் மக்களி ற்குப் பயன்தரக் கூடியதாக, ஆக்க பூர்வமானதாக மற்றும் வினைத்திறன் உள்ளதாக அமையவில்லை எனப் பரவலான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மத்திய அரசினுடைய நிறுவனங்களும் மக்களிற்குச் சரியாக சேவைகளை வழங்குவதில்லை என்ற குறைபாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் நடைபெற்ற தேர்தல் மூலம் தெரிவாகிய உள்@ராட்சி சபைகள் வினைத்திறனாகச் செயற்படுமா என்ற கேள்விக் குறியும் இன்று வடபகுதி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந் நிறுவனங்கள் வினைத்திறனுள்ளதாகவும், மக்களிற்குப் பயன்பாடுள்ளதாகவும்,
துரித கதியினாலான சேவைகளை வழங்குவதாகவும் செயற்படுகின்றனவா என்பதனை இனங்கண்டு அவ்வாறு செயற்படுவதற்கு ஏதாவது நியாயபூர்வமான தடைகள் உள்ளனவா அல்லது வினைத்திறனற்ற, ஆக்கபூர்வவமற்ற, மந்த கதியினாலான செயற்பாடுகள் மற்றும் ஊழல் போன்றவை இவற்றிற்கான காரணிகளா என்பதனைக் கண்டறிந்து மக்கள்முன் கொண்டு வருவதன் மூலம் இவற்றின் செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்துவதே எம்; செயற்றிட்டத்தின் நோக்கெல்லலையாகும்.
அத்துடன், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஃ யுவதிகள், குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்கள் மற்றும் விதவைகளின் நிலைபேறு வாழ்வாதார மேம்பாட்டிற்கு இவ் அரச நிறுவனங்கள், எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதோடு அவ்வாறான திட்டங்களைத்
துரித கதியில் செயற்படுத்ததுவதற்கான வழிமுறைகளையும் “முன்னோக்கி நகர்வோம்;” வேலைத்திட்டம் வழங்குவதற்குத் தயாராக உள்ளது. பிழை பிடிப்பதோ அல்லது குறை காணுவதோ “முன்னோக்கி நகர்வோம்;” வேலைத்திட்டத்தின்; நோக்கம் அல்ல. எமது மக்களின் வளமான வாழ்விற்கு அல்லது அவர்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கு இந் நிறுவனங்களின் செயற்பாடுகளிற்கு உந்து சக்தியாக இருந்து செயற்படுவதே எமது குறிக்கோள்.
சுருங்கக் கூறின், இந் நிறுவனங்களைக், குறிப்பாக வடக்கு மாகாண சபையியினையும் உள்@ராட்சி சபைகளினையும், மேலும் வினைத்திறனாக செயற்பட வைப்பதற்கு உதவுவதே எமது நோக்கம். கட்சிபேதங்களின்றி, இவ் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை ஊழலற்ற மேலும் வினைத்திறனான செயற்பாட்டினை நோக்கி முன்நகர்த்த விளையும்; யாவரும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும்.
இந் நோக்கு எல்லைக்காகத் துறைசார் நிபுணர்கள் தமது சேவைகளை வழங்குவதற்காக, அவர்கள் நாட்டிற்குள் வாழ்பவர்களாகவோ அல்லது உலகின் எப்பாகத்தில் வாழ்பவராகவோ இருந்தாலும், “முன்னோக்கி நகர்வோம்;” வேலைத்திட்டம்; களம் அமைத்துக் கொடுக்கும்.