பால் கொள்வனவு வாகனமும் இராணுவ வாகனமும் மோதி கோர விபத்து..!

ஆசிரியர் - Editor I
பால் கொள்வனவு வாகனமும் இராணுவ வாகனமும் மோதி கோர விபத்து..!

பால் விநியோக வாகனமும் இராணுவ வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான லீற்றர் பால் நிலத்தில் சிந்தியுள்ளது. 

குறித்த விபத்து இன்று காலை ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

நெடுகேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இராணுவ வாகனம் ஒட்டுசுட்டான் சம்மளம்குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென திருப்ப முற்பட்ட நிலையில் பின்னால் வந்த 

பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதனால் கொள்வனவு செய்து கொண்டு சென்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான லீற்றர் பால் வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றிய வாகன சாரதி காயமடைந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு