திடீரென 100 மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்!! -பாறைகள் தென்பட்டதால் பதறிய மக்கள்-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதியில் புனித நீராடினர்.
இந்த நிலையில், அக்னி தீர்த்தம் சங்குமால் கடற்கரை பகுதியில் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனை கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். இயற்கை சீற்றம் ஏதோ ஏற்படப் போவதாக பதட்டம் அடைந்தனர். இருப்பினும் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. கடல் அமைதியாக காணப்பட்டது.
இதனால் ஒரு சில பக்தர்கள் அச்சம் அடைந்த போதிலும் பல பக்தர்கள் அதை பற்றி கவலைபடாமல் புனித நீராடினர். கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள், சாமி சிலைகள் வெளியே தென்பட்டது. இதனையும் பக்தர்கள் தரிசித்தமை குறிப்பிடத்தக்கது.