SuperTopAds

குடும்ப வன்முறை!! -3 சகோதரிகள் இரு குழந்தைகளுடன் தற்கொலை-

ஆசிரியர் - Editor II
குடும்ப வன்முறை!! -3 சகோதரிகள் இரு குழந்தைகளுடன் தற்கொலை-

தினமும் சாவதற்கு பதில் ஒரு முறை செத்து விடலாம் என சம்பவத்திற்கு முந்தின நாள் வாட்ஸ்அப்பில் மம்தா தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தானில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 2 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 3 சகோதரிகள் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய்ப்பூர் மாவட்டத்தில் துது நகரில் கிணறு ஒன்றில் 5 உடல்கள் மிதந்துள்ளன. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் மக்கள் பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை தகவல் தெரிவித்தனர்.

சம்பவ பகுதிக்கு சென்ற பொலிஸார் உடலங்களை கைப்பற்றினர். உயிரிழந்திருந்த பெண்கள் காலு தேவி, மம்தா மற்றும் கம்லேஷ் என அடையாளம் காணப்பட்டனர். 4 வயது குழந்தை மற்றும் பிறந்து 27 நாட்களேயான சிசு ஆகிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இவர்கள் இருவரும் காலு தேவியின் குழந்தைகள். இவர்களில் மம்தா தேவி மற்றும் கம்லேஷ் ஆகிய இருவரும் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர்.

கடந்த புதன்கிழமையே அவர்கள் 5 பேரும் காணவில்லை என கூறப்படுகிறது. ஆனால், நேற்று வரை பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபடவில்லை.

இவர்களின் கணவர்கள் குடித்துவிட்டு தினமும் அவர்களை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.