ராக்கியை பார்த்து முழு சிகரெட்டையும் புகைத்த 15 வயது சிறுவன்!! -நுரையீரல் பாதிப்பால் வைத்தியசாலையில்-
அண்மையில் வெளியான கே.ஜி.எப்; 2 படத்தில் வரும் ராக்கி பாய் வேடத்தில் ஈர்க்கப்பட்டு முழு சிகரெட் பேக்கையும் புகைத்த 15 வயது சிறுவனின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்ததாக, நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படம் வசூலில் பல நூறு கோடிகளை கடந்து சாதனை படைத்தது.
இப் படத்தினை தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள 15 வயது சிறுவன் 2 நாட்களில் 3 முறை பார்த்திருக்கிறான். அதில் ராக்கி பாய் வேடத்தில் வரும் நடிகர் யாஷின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு உள்ளான். இதனால், ஒரு முழு சிகரெட் பேக்கையும் ஒரே மூச்சில் புகைத்துள்ளான்.
இதன் விளைவாக, அந்த சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி மற்றும் இருமலும் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஐதராபாத்தில் உள்ள செஞ்சுரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்பின் வைத்தியர்கள் போராடி சிகிச்சை வழங்கி சிறுவனை மீட்டுள்ளனர். அவனுக்கு கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டு உள்ளது.