வடமாகாண மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உரம் உள்ளிட்டவற்றை யாழ்.காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வழங்க இந்திய ஆதரவு..! டக்ளஸ் முயற்சி...

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உரம் உள்ளிட்டவற்றை யாழ்.காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வழங்க இந்திய ஆதரவு..! டக்ளஸ் முயற்சி...

வடமாகாண மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான உரம் உள்ளிட்டவற்றை காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கொண்டுவருவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். 

தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு