SuperTopAds

யாழ்.கச்சதீவை மீட்க இதுதான் சரியான தருணமா? தமிழக முதல்வரின் கருத்துக்கு டக்ளஸ் சொன்ன பதில், சட்டபூர்வமான கடிதம் அனுப்பபோவதாகவும் கருத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவை மீட்க இதுதான் சரியான தருணமா? தமிழக முதல்வரின் கருத்துக்கு டக்ளஸ் சொன்ன பதில், சட்டபூர்வமான கடிதம் அனுப்பபோவதாகவும் கருத்து..

யாழ்.கச்சதீவை மீட்பதற்கு சாத்தியமான தருணம் இதுவே என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தினை நான் மறுக்கவில்லை. ஆனால் அது சாத்தியமற்ற ஒன்று என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். 

தமிழகத்திற்கு நேற்றுமுன்தினம் விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்ப்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார். 

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் அவர்களின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும் தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது. 

இந்தியாவின் தமிழக மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் அதற்காக முதலமைச்சர் அவர்கள் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். 

அதில் அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் பஜாக்க தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன்என தெரிவித்துள்ளார்.