அமெரிக்க துப்பாக்கிச்சூடு!! -உயிரிழந்த நண்பியின் ரத்தத்தை உடலில் பூசி உயிர் பிழைத்த சிறுமி-

ஆசிரியர் - Editor II
அமெரிக்க துப்பாக்கிச்சூடு!! -உயிரிழந்த நண்பியின் ரத்தத்தை உடலில் பூசி உயிர் பிழைத்த சிறுமி-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்ப பாடசாலைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் வகுப்பில் இருந்த குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இக் கொடூர சம்பவத்தில் ஒரே வகுப்பில் இருந்த 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை பொலிஸார் சுட்டு வீழ்த்தினர்.

இதனிடையே, இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டின் போது ஒரு சிறுமி சாதூரியமாக செயல்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

4 ஆம் வகுப்புக்குள் துப்பாக்கியுடன் குற்றவாளி நுழைந்து கண்ணில் பட்ட குழந்தைகளை சுட்டுள்ளான். அப்போது, வகுப்புக்குள் இருந்த மிஹா செரில்லொ (11 வயது) உடனடியாக தரையில் படுத்துள்ளார்.

குற்றவாளி துப்பாக்கியால் சுட்டதில் மிஹாவின் தோழிகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்துள்ளனர். தொடர்ந்து அவர் துப்பாக்கியால் சுட்டதில் மிஹாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால், வலியை பொறுத்துக்கொண்டு உயிரிழந்த தனது தோழியின் உடலில் இருந்த ரத்தத்தை மிஹா தனது உடலிலும், உடையிலும் பூசியுள்ளார். இதனை தொடர்ந்து மிஹா உயிரிழந்தது போல அசைவின்றி தரையில் படுத்துக்கிடந்துள்ளார். இதனால், வகுப்பறையில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கருதி குற்றவாளி வகுப்பறையில் இருந்து வெளியேறியுள்ளான்.

சல்வடொரை சுட்டுவீழ்த்திய பின் வகுப்பறைக்குள் காயம் மற்றும் அதிர்ச்சியுடன் படுத்திருந்த மிஹாவை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு