'தளபதி 66' படத்தின் புதிய புகைப்படம்!! -வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு-

ஆசிரியர் - Editor II
'தளபதி 66' படத்தின் புதிய புகைப்படம்!! -வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜயின் 'தளபதி 66' படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு ரசிகர்களை உட்சாகப்படுத்தியுள்ளது. 

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். விஜய் 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. 

இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படம் தளபதி விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று குறிப்பிட்டு அதனுடன் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு