ஐ.பி.எல் வரலாற்றில் 4 ஆவது முறையாக 600 ஓட்டங்கள்!! -கே.எல்.ராகுல் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் வரலாற்றில் 4 ஆவது முறையாக 600 ஓட்டங்கள்!! -கே.எல்.ராகுல் புதிய சாதனை-

நடைபெற்று வரும் 15 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்டஸ் அணி, டூ பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்களை குவித்தது. 208 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ஓட்டங்களால் போராடி தோல்வி அடைந்தது. 

அணியின் வெற்றிக்காக போராடிய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 79 ஓட்டங்களை பெற்ற ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி நடப்பு ஐ.பிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் 79 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் ராகுல் இந்த சீசனில் 600 ஓட்டங்களை கடந்துள்ளார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 616 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் 4 சீசன்களில் 600 ஓட்டங்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் 2021 ஆம் ஆண்டில் 626 ஓட்டங்கள், 2020 ஆம் ஆண்டில் 670 ஓட்டங்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டில் 659 ஓட்டங்;களை கே.எல்.ராகுல் எடுத்துள்ளார். இடையில் 2019 ஆம் ஆண்டும் மட்டும் 593 ஓட்டங்களை பெற்று 7 ஓட்ட வித்தியாசத்தில் 600 ஓட்டங்களை தாண்டும் வாய்ப்பை நழுவ விட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு