நகைச்சுவை நடிகர் போண்டா மணி வைத்தியசாலையில்!!

ஆசிரியர் - Editor II
நகைச்சுவை நடிகர் போண்டா மணி வைத்தியசாலையில்!!

தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி கதாநாயர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் நகைச்சுவை காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

இந்நிலையில், இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரச வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு