SuperTopAds

100 மீற்றர் ஓட்டத்திலும் தெற்காசிய சாதனை!! -இலங்கை வீரர் யுப்புன் அசத்தல்-

ஆசிரியர் - Editor II
100 மீற்றர் ஓட்டத்திலும் தெற்காசிய சாதனை!! -இலங்கை வீரர் யுப்புன் அசத்தல்-

வாழ்ந்துவரும் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் யுப்புன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அங்கு நடந்த 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை யுப்புன் அபேகோன் நிலைநாட்டியிருந்தார். 

இந்நிலையில் ஜேர்மனியில் போல் க்றீவ்ஸு விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை நடந்த ஆன்ஹோல்ட் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தை 10.06 செக்கன்களில் ஓடி முடித்ததுடன் உலகின் தற்போதைய வேகமனிதன் பேர்டினண்ட் ஒமன்யாலாவை வெற்றிகொண்டு யுப்புன் புதிய சாதனையை நிலைநாட்டினார்.

காற்றின் வேகம் 0.2 எதிர்த்திசையில் இருந்ததால் அவரது இந்த சாதனை பெரும் பாராட்டைப் பெற்றது.

இத்தாலியில் கடந்த வருடம் மே மாதம் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டிய 10.15 செக்கன்கள் என்ற தனது சொந்த தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை யுப்புன் முறியடித்தார்.

கென்யாவின் குறுந்தூர ஓட்ட மன்னன் பேர்டினண்ட் ஓமன்யாலா இந்த வருடம் 100 ஓட்டப் போட்டி ஒன்றில் தோல்வி அடைந்தது இதுவே முதல் தடவையாகும்.  இரண்டாம் இடத்தைப் பெற்ற ஓமன்யாலா 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றில் ஓமன்யாலா (10.23 செக்.) வெற்றி பெற, யுப்புன் அபேகோன் 2ஆம் இடத்தைப் பெற்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் யுப்புன் வெற்றிபெற, ஓமன்யாலா 2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.