கொரோனா காலத்தில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்!! -3 வருடங்களில் 552 வழக்குகள் பதிவு-

ஆசிரியர் - Editor II
கொரோனா காலத்தில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்!! -3 வருடங்களில் 552 வழக்குகள் பதிவு-

இந்தியாவின் மதுரையில் 2020 முதல் இன்று வியாழக்கிழமை வரை 552 பாலியன் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைபாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் பலாத்காரம் செய்ததாக நகரில் 185 வழக்குகளும், புறநகரில் 210 வழக்குகளும் அடங்கும். கொரோனா காலத்தில் பாலியல்தொந்தரவு அதிகரித்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் பாடசாலை மாணவியரை காதலித்து உறவு வைத்தல், திருமண வயதை அடையாத சிறுமியை திருமணம் செய்தல் போன்றவற்றில் தான் அதிக வழக்குகள் போக்சோவில் பதிவாகின்றன. அடுத்து சிறுமிகளிடம்சில்மிஷத்தில் ஈடுபடுவது, போதையில் தவறாக நடப்பது னெ வழக்குகள் பதிவாகின்றன.

மதுரைபுறநகரில் 2020 முதல் 2022 மே 23வரை பலாத்காரம், செய்ததாக 210 வழக்குகளும், நகரில் 185 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புறநகரில் 97 வழக்குகளும் நகரில் 59 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார், கொரோனா கால கட்டத்திலேயே இது போன்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு