எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் மண்ணெண்ணை மீட்பு..! வடமாகாணத்தில் முதலாவது தரமான சம்பவம்..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 லீற்றர் மண்ணெண்ணை மீட்பு..! வடமாகாணத்தில் முதலாவது தரமான சம்பவம்..

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 900 லீற்றர் மண்ணெண்ணை மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பிரிவினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை பதுக்கப்பட்டிருப்பதாக வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில், 

மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 900 லீற்றர் மண்ணெண்ணை மீட்கப்பட்டது. 

பின்னர் மண்ணெண்ணை தேவையான மக்களுக்கு குடும்ப பங்கீட்டு அட்டையின்படி அதனை பகிர்ந்து வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை வழங்கியும் வைத்தனர். 

இதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை தீர்ந்துவிட்டதாக கூறி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக திருப்பி அனுப்பபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு