SuperTopAds

திடீர் உடல்நலக்குறைவு!! -டி.ராஜேந்தர் வைத்தியசாலையில்-

ஆசிரியர் - Editor II
திடீர் உடல்நலக்குறைவு!! -டி.ராஜேந்தர் வைத்தியசாலையில்-

நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19 ஆம் திகதி சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். 

அவரைப் பரிசோதித்த இருதயவியல் துறை வைத்தியர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.