ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!! -உக்ரைன் அதிரடி நடவடிக்கை-
உக்ரைன் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட 21 வயதான ரஷ்ய இராணுவ வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கருதி அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நாட்டின் இராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் உக்ரைன் குடிமகனை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார்.
தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்ட ஷிஷிமரின், அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ரஷ்ய - உக்ரைன் போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் இன்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது. அதன்படி, போர்க் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட வாடிம் ஷிஷிமரின்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.