பெண் செய்தியாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்க வேண்டும்!! -தலிபான்கள் அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
பெண் செய்தியாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்க வேண்டும்!! -தலிபான்கள் அதிரடி உத்தரவு-

ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அநாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ள தலிபான்கள் பெண்கள் பொது வெளியில் தலை முதல் கால் வரை மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

தற்போது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிப்பதை சனிக்கிழமைக்குள் கட்டாயமாக்க வேண்டும் என செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு