ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஜோ பைடன்!!

ஆசிரியர் - Editor II
ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஜோ பைடன்!!

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் ஆசிய நாடுகளுக்கு முதல் முறையாக உத்தியோக பூர்வமான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். 

இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது. குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார்.

முன்னதாக இன்று வெள்ளிக்கிழமை தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய ஜனாதிபதி மற்றும் அதன் பின் ஜப்பான் பிரதமரை சந்தித்து பல்வேறு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பின்னர் ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு