செல்பி மட்டும் அனுப்புங்கள்!! -பக்தைகளுக்கு நித்தியானந்தா வேண்டுகோள்-

ஆசிரியர் - Editor II
செல்பி மட்டும் அனுப்புங்கள்!! -பக்தைகளுக்கு நித்தியானந்தா வேண்டுகோள்-

நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், தனது உடல்நிலை சரியில்லாத தகவல் வெளியான நாளிலிருந்து நிறைய பணம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தயவு செய்து பணம் அனுப்பவதை நிறுத்தி விடுங்கள்.

பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். விளக்கு ஏற்றும் படத்தை செல்பி எடுத்து பதிவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.

இந்த பதிவை பார்த்த அவரது பக்தர்கள் ஏராளமானோர் நித்யானந்தா பக்தைகள் விளக்கு ஏற்றி அதன் செல்பியையும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு