ஐ.பி.எல் வரலாற்றில் சாதணை படைத்த டி காக்- ராகுல் ஜோடி!!

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் வரலாற்றில் சாதணை படைத்த டி காக்- ராகுல் ஜோடி!!

ஜ.பி.எல் ரி-20 தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.

இப் போட்டியில் நாணையசுழல்ச்சியில் வென்ற லக்னோ அணியின் துடுப்பாட்டத்தை செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் கே எல் ராகுல் - குயின்டன் டி காக் களமிறங்கினர்.

150 ஓட்டங்களை தமக்கிடையில் பகிர்ந்து கொண்ட இந்த ஜோடி கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். டி காக் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய இந்த ஜோடி விக்கெட்டை விடாமல் அதிரடி காட்டினர்.

இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்களை குவித்தது. டி காக் 70 பந்துகளில் 140 ஓட்டங்களை பெற்றார். ராகுல் 51 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்று, இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் கொல்கத்தா அணிக்கு 211 என்ற இமாலய இலக்கு நிர்ணையிக்கப்பட்டது. 

இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் ராகுல் - டி காக் ஜோடி பல சாதனைகளை படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் தொடக்க விக்கெட் பாட்னர்ஷிப்-க்கு அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் ராகுல் - டி காக் 210 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

இதற்குமுன் 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் (ஐதராபாத் அணி) கூட்டணி 185 ஓட்டங்களை அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு