தூத்துக்குடி துப்பாக்கி சூடு!! -விசாரணை அறிக்கை ஸ்டாலினிடம் கையளிப்பு-

ஆசிரியர் - Editor II
தூத்துக்குடி துப்பாக்கி சூடு!! -விசாரணை அறிக்கை ஸ்டாலினிடம் கையளிப்பு-

தூத்துக்குடி துப்பாக்கி சூடுக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை கையளித்துள்ளனர். 

தூத்துக்குடியில், 2018 மே 22 ஆம் திகதி 'ஸ்டெர்லைட்' தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, போராட்டம் நடந்தது அப்போது வன்முறை வெடித்திருந்தது. 

பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் இறந்தனர். இச் சம்பவம் தொடர்பில் விசாரிக்க, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது.

அவர் மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில், விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே 14 ஆம் திகதி முதல்வரை சந்தித்து, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். 

நேற்று புதன்கிழமை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சரை சந்தித்து, விசாரணையின் முழு அறிக்கையை கையளித்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு