வேகப் பந்து வீச்சில் புதிய சாதனை படைத்தார் பும்ரா

ஆசிரியர் - Editor II
வேகப் பந்து வீச்சில் புதிய சாதனை படைத்தார் பும்ரா

ரி-20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 

இந்நிலையில், 250 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், மும்பை வேகப்பந்த வீரர்பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார். 

இதன் மூலம் ரி-20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.  

அவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு