முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ அச்சுறுத்தும் வகையில் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில்..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சூழ அச்சுறுத்தும் வகையில் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில்..!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நினைவு வளாக சூழலில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் 

மற்றும் பொதுமக்கள் நேற்று (16) நண்பகல் முதல் முன்னெடுத்துள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிஸார், இராணுவம், புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது. 

அத்தோடு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்துகொண்டிருந்த வேளை நினைவேந்தல் வளாகத்தை சுற்றி இராணுவ அதிகாரி ஒருவருடைய வாகனம் உள்ளிட்ட இரு இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டடுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு