ஒரு ஓட்டத்தால் இரட்டைச் சதத்தை தவறவிட்ட மத்யூஸ்!! -இலங்கை 397 ஓட்டங்கள் குவிப்பு-

ஆசிரியர் - Editor II
ஒரு ஓட்டத்தால் இரட்டைச் சதத்தை தவறவிட்ட மத்யூஸ்!! -இலங்கை 397 ஓட்டங்கள் குவிப்பு-

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் சிட்டகொங்கில் நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மத்யூஸ் ஒரு ஓட்டத்தால் (199) தனது இரட்டை சதத்தை தவறவிட்டார். 

மத்யூஸின் பொறுப்பான ஆட்டத்தால் இப் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இனிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்றது. அஞ்சலோ மத்யூஸ் 114 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமல்  34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர்.  

இன்று 2 ஆம் நாள் ஆட்டத்தில் அரைச்சதமடித்த தினேஷ் சந்திமல்  66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்துவந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதும்  மிகச் சிறப்பாக ஆடிய அஞ்சலோ மத்யூஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை நெருங்கிய நிலையில் 199 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது துர்திஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக அவர் தனது இரண்டாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தை ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார். இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இனிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் ஓசத பெர்னாண்டோ 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நஹீம் ஹசன் 6 விக்கெட்டுக்களையும் சகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் மஹமடுல் ஹசன் ஜோய்- 31, தமிம் இக்பால் -35 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டமிழக்காதிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு