ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தொடர்ந்து சுயாதீன எம்.பிக்கள் குழுவும் புதிய பிரதமருக்கு ஆதரவு! பலம் பெறுகிறார் ரணில்..

ஆசிரியர் - Editor I
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தொடர்ந்து சுயாதீன எம்.பிக்கள் குழுவும் புதிய பிரதமருக்கு ஆதரவு! பலம் பெறுகிறார் ரணில்..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தொடர்ந்து நாடாளுமன்றில் சுயாதீனமான செயற்படுவதற்கு தீர்மானித்த 10 கட்சிகளின் சுயாதீன எம்.பிக்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். 

பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 

என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். எனினும் அமைச்சு பதவிகள் எதனையும் ஏற்கப்போவதில்லை. என சுயாதீன எம்.பிக்கள் குழு தொிவித்திருக்கின்றது. 

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நேற்றய தினம் மாலை தனது அதரவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளதுடன், புதிய அரசில் பங்காளிகள் ஆகவும் தீர்மானித்திருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு