இதுதான் எனது இறுதி ஐ.பி.எல்!! -அறிவித்துவிட்டு பதிவை நீக்கிய சென்னை வீரர்-

ஆசிரியர் - Editor II
இதுதான் எனது இறுதி ஐ.பி.எல்!! -அறிவித்துவிட்டு பதிவை நீக்கிய சென்னை வீரர்-

அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

ஐ.பி.எல் ரி-20 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, இந்த சீசன் தான் நான் விளையாடும் கடைசி தொடர் என ருவிட்டர் பதிவிட்டார். இருப்பினும் சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கியுள்ளார். 

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டடிருந்ததாவது:- 

இது தான் எனது கடைசி ஐ.பி.எல் தொடர் என மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். ஐ.பி.எல்லின் இரு சிறந்த அணிகளில் 13 வருடமாக விளையாடியதை அற்புதமாக உணர்கிறேன். இந்த பயணத்தை வழங்கியதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிகுக்கும் எனது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த ருவீட்டரி ரசிகர்கள் பகிர்ந்து வந்த நிலையில், உடனே அழித்துவிட்டார். இதையடுத்து அவர் முடிவை மாற்றிவிட்டாரா அல்லது தொடர் முடிந்தபின் தனது ஓய்வை அறிவிப்பாரா என ரசிகர்கள் கேல்வி எழுப்பி வருகின்றனர்.

அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அவர் இதுவரை 187 போட்டிகளில் விளையாடி 4,187 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவர் அதிகபட்சமா ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு