தலையில் கைவைக்கும் மும்பை அணி!! -கார்த்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்-

ஆசிரியர் - Editor II
தலையில் கைவைக்கும் மும்பை அணி!! -கார்த்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்-

இந்தியன் ப்றீமியர் லீக் ஜ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில், 18 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றது. 

16 புள்ளிகளுடன் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி 2 ஆவது இடத்திலும், தலா 14 புள்ளிகளுடன் இராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்கிளல் உள்ளன.

டெல்லி கெப்பிடல்ஸ், பஞ்சாப கிங்ஸ் ஆகிய அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் முறையே 5 ஆம் மற்றும் 6 ஆம் இடங்களில் உள்ளன.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலான அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முறையே 7 ஆம் மற்றும் 8 ஆம் இடங்களில் உள்ளன.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் இறுதி இடத்திலும் உள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஓப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மும்பை மற்றும் சென்னை அணிகள் பிளேஓப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.

லன்கோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றுவிட்டால், பிளேஓப் வாய்ப்பை உறுதிசெய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எஞ்சியுள்ள 6 அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளேஓப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை உள்ளதால், அடுத்துவரும் போட்டிகளில் குறித்த அணிகளுக்கு முக்கியத்தும் மிக்கதாய் அமைந்துள்ளன.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio