வணிக வளாகத்தில் திடீர் தீ!! -27 பேர் உடல் கருகிப் பலி-

ஆசிரியர் - Editor II
வணிக வளாகத்தில் திடீர் தீ!! -27 பேர் உடல் கருகிப் பலி-

இந்தியா நாட்டின் டெல்லியிலுள்ள வணிக வளாகமொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை  வணிகக் கட்டிடத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி தீ விபத்தில் இன்று சனிக்கிழமை காலை வரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இது மிகவும் வருத்தமான சம்பவம். முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டடத்தில் திடீரெ பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை வரை 27 உடல்கள் மீட்கப்பட்டு 8 பேர் படு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio