பூமி மீது மோத வரும் ராட்சத விண்கல்!! -விண்ணில் வைத்தே அழிக்க நாசா விஞ்ஞானிகள் திட்டம்-

ஆசிரியர் - Editor II
பூமி மீது மோத வரும் ராட்சத விண்கல்!! -விண்ணில் வைத்தே அழிக்க நாசா விஞ்ஞானிகள் திட்டம்-

விண்வெளியில் சுற்றித் திரியும் ராட்சத விண்கல் ஒன்று பூமி மீது மோதுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக பூமியின் அருகே கடந்து செல்லும் ராட்சத விண்கற்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராட்சத விண்கல் பூமியின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏதாவது ஒரு நாட்டின் மீது வந்து விழுந்தால் மிகப்பெரிய சேதாரம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பல உயிர்கள் பலியாகக் கூடும். தற்போது 3889945 என்கிற ராட்சத விண்கல் பூமியின் மிக அருகில் (2.5 மில்லியன் மைல்) கடந்து செல்ல உள்ளது.

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பிரான்ஸின் ஈபிள் டவர் ஆகியவற்றை விட அதிக விட்டம் கொண்ட இந்த பிரம்மாண்ட விண் கல்லானது பல வருட காலமாக பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அருகே கடந்து பூமியை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் செல்வது வாடிக்கை. இந்த வருடத்தை அடுத்து 2063 ஆம் ஆண்டு மீண்டும் இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 

இதுபோன்று விண்கற்கள் பூமியை தாக்காமல் இருக்க எதிர்காலத்தில் பூமி மீது மோத வரும் விண் கல்லுக்கு எதிராக ராட்சத விண்வெளி ஓடம் ஒன்றை விண்ணில் ஏவி, விண்கல்மீது மோதவிட்டு அதன் பாதையை மாற்றி திசை திருப்ப நாசா விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு