இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..! வதந்திகளுக்கும் மறுப்பு..

ஆசிரியர் - Editor I
இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..! வதந்திகளுக்கும் மறுப்பு..

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்தவொரு உண்மையுமில்லை. என இந்திய துாதரகம் தொிவித்துள்ளது. 

விசா வழங்கலை இந்தியா இடைநிறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து, இதுகுறித்து வழங்கியுள்ள தெளிவுபடுத்தலிலேயே இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியிருப்பதாவது, நாமோ (இந்திய உயர்ஸ்தானிகராலயம்) அல்லது இந்திய கொன்சியூலர் நாயகமோ அல்லது இலங்கையிலுள்ள இந்தியத்துணைத்தூதரகங்களோ விசா வழங்கலை நிறுத்தியிருப்பதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக மறுக்கின்றோம்.

விசா பிரிவு ஊழியர்கள் பெருமளவானோர் இலங்கையர்களாக உள்ளதால் கடந்த சில தினங்களாக அலுவலகத்திற்கு வருகைதரமுடியாமல்போனதன் காரணமாக, அதற்குரிய நடைமுறைகள் சீராக இயங்குவதில் சிக்கல்கள் காணப்பட்டன.

இலங்கையர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதை எளிதாக்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். 

இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப்போன்று இலங்கையர்களும் இந்தியாவிற்கு வரவேற்கப்படுகின்றனர் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு