விமானிக்கு உடல் நலக்குறைவு!! -திடீர் விமானியான பயணி-

ஆசிரியர் - Editor II
விமானிக்கு உடல் நலக்குறைவு!! -திடீர் விமானியான பயணி-

அமெரிக்காவில் சிறிய ரக விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இதுவரை பறக்கும் அனுபவமே இல்லாத பயணி ஒருவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

பஹாமாஸில் உள்ள மார்ஷ் துறைமுகத்தில் உள்ள லியோனார்ட் எம். தாம்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் விமானம், புளோரிடாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செயலற்று கிடந்துள்ளார்.

இதனையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பயணி ஒருவர் விமானத்தை இயக்க முடிவு செய்தார். அதன்படி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்ந்து இணைப்பில் இருந்தபடி, அவர்கள் கூறுவதை கேட்டு  விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio