தயாரிப்பாளராக அறிமுகமாகும் தோனி!! -நயந்தாரவை வைத்து முதல் படம் இயக்க முடிவு-

ஆசிரியர் - Editor II
தயாரிப்பாளராக அறிமுகமாகும் தோனி!! -நயந்தாரவை வைத்து முதல் படம் இயக்க முடிவு-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கன்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் எப்போதும் தோனிக்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டு. ஐ.பி.எல் ரி-20 தொடரில் சென்னை அணியின் தலைவராக 4 முறை வெற்றிக் கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுபெற்ற பின்னர் இயற்கை விவசாயம் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் தோனி தற்போது தன் அடுத்த அவதாரத்துக்கு தயாராகியுள்ளார்.

ஐ.பி.எல் ரி-20 தொடர் முடிந்த பின் தோனி ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாகவும் கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio