இந்திய இராணுவத்தை அனுப்புமாறு ஆலோசனை கூறிய சுப்ரமணியன் சுவாமி..! இலங்கைக்கா..?
இந்தியாவு எதிரான வெளிநாட்டு சக்திகள் மக்களின் கோபத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என கூறியிருக்கும் ப.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் என கூறியுள்ளார்.
அதேபோல் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கருத்து கூறுகையில், வரலாற்று பிணைப்புள்ள அயலவரான இலங்கையின் ஜனநாயகம்,
ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தலைநகர் புது டெல்லியில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அயல்நாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் கீழ் தற்போதைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா ஏற்கனவே 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோல் சுப்ரமணியன் சுவாமி தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருத்தில் இலங்கை என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.