SuperTopAds

நமீதா கர்ப்பம்!! -சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்-

ஆசிரியர் - Editor II
நமீதா கர்ப்பம்!! -சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்-

நமீதா - வீரேந்திர சவுத்ரி திருமணம் 2017 ஆம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாக தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா.

'தாய்மை... புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. 

நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்' என்று குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார் அவர்.