மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துடன் வந்துள்ளதாக வெளியான தகவல்..! கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தை முடக்கி மக்கள் போராட்டம்..
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருடைய குடும்பஸ்த்தினர் பாதுகாப்புக்காக திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளை முகாமிற்கு அழைத்துவரப்பட்டதாக வெளியான தகவலையடுத்து பொதுமக்கள் கடற்படை முகாம் வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
பெருமளவில் கடற்படைமுகாமில் கூடிய பொதுமக்கள் வாயிலில் நின்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.