பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது
அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள கல்கந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(9) இரவு குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் வீடு மக்களினால் எரிக்கப்பட்டுள்ளது.
இப்பாராளுமன்ற உறுப்பினர் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவரில் ஒருவருமானவார்.
இதே வேளை திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக விமலவீர திசாநாயக்கவும் டாக்டர் திலக் ராஜபக்சவும் பாராளுமன்ற உறுப்பினராக டபிள்யு.டி வீரசிங்கவுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
2020 பாராளுமன்றத் தேர்தலில்இ திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சிறி லங்கா பொதுஜன பெரமுன – 1 லட்சத்து 26ஆயிரத்து 012 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை அக்கரைப்பற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா வின் வீட்டுக்கு முன்னால் ரயர் தீயிட்டு எரிப்பு சம்பவம் இன்று திங்கட்கிழமை (9) இரவு இடம்பெற்றது இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது
காலிமுக திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபஷ மற்றும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்களை தீக்கிரையாக்கப்ட்டுவரும் நிலையில்
அக்கரைப்பற்று சாகாம வீதியிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனை கட்சியின் அமைப்பாளருமான பொடியப்பு பியசேனவின் வீட்டிற்கு முன்னாள் சம்பவதினமான இன்று இரவு ஒன்று திரண்ட இளைஞர்கள் வீதியில் ரயர்களை போட்டு தீயிட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
அத்துடன் பொலிசார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்
மேலும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியமையை கொண்டாடும் முகமாக நிந்தவூர் மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளிவாசல் மஹல்லா வாசிகளால் கஞ்சி - பாயாசம் செய்து மக்களுக்கு பருக கொடுக்கப்பட்டது
இன்று 2022.05.10 காலை ரஹ்மானியா பள்ளிவாசலுக்கு முன்னால் அப் பள்ளிவாசல் மஹல்லா நலன்விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது வீதியால் பயணித்த மற்றும் மஹல்லாவாசிகள் முதலானோருக்கு பாயாசம் வழங்கி வைக்கப்பட்டன
இவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக மக்கள் போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில்இ ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் அவர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது