கல்லீரல் பிரச்னைக்கு தீர்வாகும் பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் ஜூஸ் பருகினார் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருத்துவ தீர்வாக அமையும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் பருகி வந்தால் கல்லீரல் பிரச்னைகள் நீங்கும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாகற்காய் ஜூஸ் தயாரிக்க தேவையான தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 2
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.