SuperTopAds

றொட்டி பார்சலில் பாம்புத் தோல்!! -உணவத்திற்கு சீல்-

ஆசிரியர் - Editor II
றொட்டி பார்சலில் பாம்புத் தோல்!! -உணவத்திற்கு சீல்-

இந்தியாவின் கேரளாவில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வாங்கி வந்த றொட்டி பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் றொட்டி பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார். வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸ் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பிரியா வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சீல் வைத்தனர்.