ரி-20 போட்டிகளில் அதிக அரை சதங்கள்!! -வார்னர் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
ரி-20 போட்டிகளில் அதிக அரை சதங்கள்!! -வார்னர் புதிய சாதனை-

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரான டேவிட் வார்னர் 92 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருது பெற்றுக் கொண்டார். 

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் நேற்று வியாழக்கிழமை இரவு டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

முதலில் பேட்செய்த டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்களை குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களையும், பாவெல் 67 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். 

அடுத்து ஆடிய ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்களையே பெற்றது. இதனால் டெல்லி அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இப் போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 89 ஆவது அரை சதம் கடந்தார். இதன்மூலம் ரி-20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio