SuperTopAds

பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள் இந்த ராஜபக்ஸக்கள்..! அவர்களோடு நான் இருந்ததும் இல்லை இருக்கபோவதுமில்லை...

ஆசிரியர் - Editor I
பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள் இந்த ராஜபக்ஸக்கள்..! அவர்களோடு நான் இருந்ததும் இல்லை இருக்கபோவதுமில்லை...

நான் ராஜபக்ஸக்களுடன் எப்போதும் இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. என கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதே ராஜபக்ஸக்கள் பிரபாகரனுடன் சேர்ந்து என்னை கவிழ்க்க திட்டம் தீட்டியவர்கள். எனவும் சாடினார். 

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நான் ராஜபக்ஷக்களின் குழுவில் இருப்பதாக கூறுகின்றனர். நான் ராஜபக்ஷக்களுடன் எப்போதும் இருந்தது இல்லை. 

ராஜபக்ஷக்கள் பிரபாகரனுடன் இணைந்து என்னை கவிழ்க்க திட்டமிட்டார்கள். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் தொடர்பில் நான் இங்கு தெரிவிக்க வேண்டும். 2013-02-21 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து 

அவர் அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்டார். நான் அதனை வாசிக்கிறேன்.  ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரை புதிய அமைப்பாளர்களாக நியமித்துள்ளது.

இதனால் நான் இல்லை. அன்றும் நான் சென்றதில்லை. அவருக்கு பழக்கமாகி இருக்கக்கூடும். மஹிந்த சரணம் கச்சாமி. பெசில் சரணம் கச்சாமி. நாமல் சரணம் கச்சாமி என கூற. நான் எப்போதும் அவ்வாறு கூறியது கிடையாது. 

அதனால் தயவு செய்து எனக்கு அதனை கூற வர வேண்டாம் என்றார்.