இலங்கை மக்களுக்கு தங்கள் ஒருமாத சம்பவத்தை கொடுக்கும் அரசியல்வாதிகள், மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த கடிதம்..

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களுக்கு தங்கள் ஒருமாத சம்பவத்தை கொடுக்கும் அரசியல்வாதிகள், மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மஹிந்த கடிதம்..

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமான பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றியுடன் நினைவுகூர்ந்து தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் அனப்பியிருக்கின்றார். 

குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,தமி­ழக சட்­டப்­பே­ர­வையில் தாங்கள் கொண்­டு­வந்த தனித் தீர்­மா­னத்­தின்­படி இலங்­கையில் தற்­போது நிலவி வரும் கடும் பொரு­ளா­தார சூழ்­நி­லையில் கடும் சிர­மத்­திற்கு ஆளாகி உள்ள மக்­க­ளுக்கு 

தமிழ்­நாட்­டி­லி­ருந்து உணவு, அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்­கப்­படும் என்று தாங்கள் அறி­வித்­துள்­ளமை தங்­க­ளது நல்லெண்­ணத்தைக் குறித்­து­நிற்­கின்­றது.

இலங்கைப் பொரு­ளா­தார நெருக்­க­டியை அண்டை நாட்டுப் பிரச்­சி­னை­யாகப் பார்க்­காது மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நோக்கும் தங்­க­ளிற்கும் தமிழ்­நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன், 

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.