SuperTopAds

ஹர்த்தாலுடனான பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு

ஆசிரியர் - Editor III
ஹர்த்தாலுடனான பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு

நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுடனான   பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக  கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு நல்குவதாக சங்கத்தின்  செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

இதன்படி நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் கல்முனை வர்த்தக சங்கமும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிலாளர் சங்கத்தின் தலைவரால்  எமது சங்கத்திற்கு 6.5.2022 அன்று ஹர்த்தாலை அனுஸ்டிக்கும் படி விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய இன்று(5) எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமானது ஒன்று கூடி ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய நாளை(6) எமது பொதுச்சந்தை முற்றாக மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு வழங்கப்பட தீர்மானித்துள்ளது என தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில்  எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால்  மற்றும் போராட்டங்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அன்றைய தினம் அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றுமாறும் ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.