SuperTopAds

கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டிய நடிகை!! -அவரின் உயிருக்கு ஆபத்து என தகவல்-

ஆசிரியர் - Editor II
கந்து வட்டிக்காரர்களிடம் மாட்டிய நடிகை!! -அவரின் உயிருக்கு ஆபத்து என தகவல்-

மலையாள நடிகை மஞ்சு வாரியர் சிலரின் கட்டுப்பாட்டின் கீழ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மலையாள இயக்குனர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

அவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமாவார். 

இந்நிலையில், பிரபல மலையாள டைரக்டர் சணல் குமார் சசிதரன் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

நான் மஞ்சு வாரியரை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனாலும் அவருடன் தனியாக பேச முடியவில்லை. மஞ்சு வாரியரின் உதவியாளர்களாக இருந்து பின்னர் நிர்வாக தயாரிப்பாளர்களாக மாறிய பினிஸ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளனர். 

ஒரு நிகழ்ச்சியில் நான் மஞ்சுவாரியரிடம் பேச முற்பட்டபோது, வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விட்டனர். மஞ்சு வாரியரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். ஏதேனும் வீடியோவை வைத்து மஞ்சுவாரியரை பிளாக் மெயில் செய்கின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மலையாள நடிகைகள் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.