SuperTopAds

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை!! -மத போதகருக்கு 18 ஆண்டு சிறை-

ஆசிரியர் - Editor II
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை!! -மத போதகருக்கு 18 ஆண்டு சிறை-

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த மத போதகர் ஒருவருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பாடசாலை, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளது. அப் பாடசாலையின் தாளாளராக, 35 வயதான மத போதகர் ஒருவர் செயற்பட்டு வந்தார். 

குறித்த மத போதகர் 2017 ஆம் ஆண்டு இங்கு தங்கியிருந்த 16 வயதான மாணவர்கள் 4 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் கொல்லம் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதில் 3 வழக்குகளில் போதகருக்கு தலா 5 ஆண்டுகளும், இன்னொரு வழக்கில் 3 ஆண்டுகளும் என மொத்தம் 18 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

அதோடு 4 வழக்குகளிலும் தலா ஒரு இலட்சம் அபராதமும் விதித்தார். தொகையை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என மாவட்ட சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.