SuperTopAds

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோில் சந்தித்து நன்றி கூறுவேன்..! வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா..

ஆசிரியர் - Editor I
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோில் சந்தித்து நன்றி கூறுவேன்..! வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா..

தீவிரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்கு முன்வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை நோில் சந்தித்து இலங்கை மக்களின் சார்பில் நன்றிகளை கூறுவேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்தியாவிலுள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்ற வேளையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு 

123 ரூபா கோடி மதிப்பில் உணவு, பால் மா , மருந்து, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கிட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அனுமதி வழங்கிட மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் 

மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன் .இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து எவ்வகையான நடவடிக்கைகள் தேவை என்பதை அரசு பரிசீலனை நடத்திவருகிறது. 

எனத் தெரிவித்தார்.